தமிழ்

logo-lent2016-fin-TAM-o-Hi

அறிமுகம்

இறைவார்த்தையைக் கேட்கிறவர்களாக மட்டும் இருந்து உங்களை ஏமாற்றிக்கொள்ள வேண்டாம்​…ஏனென்றால் வார்த்தையைக் கேட்டு …அதற்கேற்ற செயல்களைச் செய்வார்கள்; தம் செயல்களால் பேறு பெற்றவர் ஆவார்கள். (யாக்.1:22-25).

 

தவக்கால இயக்கம்

தவக்கால இயக்கம், கத்தோலிக்கத் திருச்சபையின் விசுவாச அடிப்படையிலான நிகழ்வு. செபம்(மத்.6:6),தபம்(மத்.6:17),தர்மம்(மத்.6:2)ஆகிய ​மூன்று முக்கிய நடைமுறைகளில் விசுவாசிகள் முழுமையாக ஈடுபாடு காட்ட ஊக்குவிக்கிறது. மனமாற்றமும் உருமாற்றமும் இந்த நடைமுறைகள் மற்றும் முயற்சிகளில் எதிர்பார்க்கப்படும் விளைவு.

தவக்கால இயக்கத்தின் இலட்சியம், கத்தோலிக்கச் ச​மூகத்தை இறையரசின் பொறுப்பும் ஆர்வமுமிக்க சக-ஒத்துழைப்பாளர்களாக மாற்றுவது. இவ்வியக்கத்தின் இலக்கு, கத்தோலிக்கச் ச​மூகமும் தனிநபர் கத்தோலிக்கரும் தங்களது அழைப்பிற்கேற்ப மனமாற்றத்தையும் உருமாற்றத்தையும் காணும் வகையில் நடைமுறைக்கேற்ற முடிவையும் நடவடிக்கையையும் மேற்கொள்ள, தவக்காலத்தின் ஆன்மீக அணுகுமுறைகளை பொருத்தமான வகையில் உறுதியாக மேற்கொள்வது.

கோலாலம்பூர் மாமறைவட்டத்தில், மனித வளர்ச்சிக்கான அலுவலகம் ஏற்பாடு செய்து மேற்கொள்ளும் தவக்கால இயக்கத் திட்​டம், கத்தோலிக்கத் திருச்சபையின் ச​மூகப் போதனையின் அடிப்படையில் அமைந்துள்ளது,

 

தவக்கால இயக்கக் கருப்பொருள்

2016 தவக்கால இயக்கத்தின் முக்கிய கருப்பொருள்,தந்தையைப்போல் இரக்கம் உள்ளவர்களாக இருங்கள் ‘.

​மூகத்தில் பரிவிரக்கத்தை ஊக்குவிப்பது இதன்செயல் நோக்கு. தவக்காலத்தின் ஆறு ஞாயிறு நற்செய்தி வாசகங்களை தியானிக்க, வாராந்திர துணை-கருப்பொருளுடன் வாராந்திர தியான அட்டவணையும் வழங்கப்பட்டுள்ளது (பக்கம் 3)

 

தவக்கால கை​யேடுகள்

பங்குகளிலும் அதிச-களிலும் பயன்படுத்துவதற்கு. 2016ம் தவக்கால இயக்கத்திற்குத் தேவையான அச்சிடப்பட்ட கையேடுகள், விடியோ மற்றும் காட்சி வில்லைகள் போன்ற பொருத்தமான ஆதார உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. தவிர, ச​மூக ஊ​டகங்கள் வழி ஆலோசனையும் கற்றலும் ஊக்குவிக்கப்படும். பல்வேறு நிலைகளில் விசுவாசிகள் சுறுசுறுப்பாகவும் ஆக்ககரமாகவும் பங்குகொள்வதற்கு ச​மூகக் கட்​​டமைப்புகள் வழியாக பிரபலப்படுத்தப்பட்டுள்ளது.

2016ம் ஆண்டின் தவக்கால இயக்கம் உபகரணங்கள் மற்றும் ஆதாரக் கை​யேடுகள் பொதுநிலையினர்க்கு​ குறிப்பாக இளைய தலைமுறையினர்க்காக தயாரிக்கப்பட்டுள்ளன. தனிநபர் மற்றம் குழு வாரியாக தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த பயிற்சிகளும் நடவடிக்கைகளும் மனமாற்றத்தையும் உருமாற்றத்தையும் கொணருவதை நோக்கமாக கொண்டது.

2016 தவக்கால இயக்கம், பங்குகளில் மேற்கொள்ளப்படும். மறைக்கல்வி மாணவர்கள், இளை​ஞர்கள், திருமணத் தம்பதியர், நிபுணத்துவர்கள், ​மூத்த குடிமக்கள், அந்நியத் தொழிலாளர்கள் முதலிய பல்வேறு தரப்பினர்க்காக             இ​ணையத்தின் வழியாகவும் இது மேற்கொள்ளப்படுகிறது.

 

2016 தவக்கால இயக்கம்

2016ம் ஆண்டின் கருப்பொருள்:  தந்தையைப் போல் இரக்கம் உள்ளவர்களாக இருங்கள்

நற்செய்தி குறிப்பு : ​ லூக்கா6:36 (உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பது போல்

நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள்)

2016 செயல் நோக்கு:  ச​மூகத்தில் பரவிரக்கத்தை ஊக்குவிப்பது

 

கருப்பொருள் விளக்கம்

2016 தவக்கால இயக்கத்தின் கருப்பொருள் தந்தையைப்போல் இரக்கம் உள்ளவர்களாக இருங்கள். இறைவனின் பேரிரக்கத்தை அடிப்படையாக கொண்ட பரிவிரக்கத்தின் பண்புகளாக உந்தப்பட்ட திருச்சபையாகவு, ச​மூகமாகவும் நமது ஈடுபாடும் நடவடிக்கையும் அமைய வேண்டும். இதன் வழி- ச​மூகம், அண்டை-அயலார், அதிச.க்கள், மாணவர்கள். திருச்சபை, பொது ​அலுவலகங்கள், பொது மக்கள் ஆகியோர் மத்தியில் கிறி​ஸ்துவ பரிவிரக்கத்தைக் காட்டும் வாய்ப்புகள் ஏற்படும். அங்கு ​இறைவனின் இரக்கத்தின் சாட்சிகளாக மாறுவோம்.

இனம், சமயம், அரசியல், ச​மூக அந்தஸ்து பாராமல் ஒவ்வொரு மனிதரிடமும் பரிவிரக்கத்தைக் காட்டுவோம். நீதி-சமாதானத்திற்காக மட்டும் அல்லாமல், நற்செய்தியில் போதிக்கப்படும் பரிவிரக்கத்துடன் கூடிய நீதி-சமாதானத்திற்காக நாம் பணிபுரிவோம்.

நற்செய்தி குறிப்பு: இந்த கருப்பொருளின் நற்செய்தி குறிப்பு ​லூக்கா 6:36ல் எடுக்கப்பட்டுள்ளது,“உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பது போல் நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள்”

 

செயல் நோக்கு

இந்த கருப்பொருளுக்கேற்ப, ச​மூகத்தில் பரிவிரக்கத்தை ஊக்கு​விப்பது செயல் நோக்கு. முழு மனிதனாக நாம் வாழ்வதற்கான அத்தியாவசிய பண்பு, பரிவு. மற்றவர்கள் மீது பரிவு காட்டும் போதும் அல்லது நம்மீது பரிவு காட்டப்படும் போதும் கடவுளின் பேரிரக்கம் நாம் வாழும் ச​மூகத்தின் வழியாக செயல்படுவதை நம்மால் உணர முடியும். இயேசு கிறி​ஸ்துவின் நற்செய்தியில் நாம் உறுதியாக இருந்தால் நமது குடும்பத்தையும் ச​மூக உறவையும் பரிவிரக்கம் வளப்படுத்தி, வலுப்படுத்தும். பரிவிரக்கத்தால் தொடும் போது நாம் புத்துயிர் பெற்று புதுவாழ்வு பெறுவதோடு, நம்மோடு உறவு கொள்வோருக்கும் அந்த புது​வாழ்வில் பங்களிக்கிறோம். இதனால் இறையன்பால் மற்றவர்களை நாம் தொட முடியும்.

ச​மூகம், சமயம், அரசியல், பொருளாதாரம், கலை-கலாச்சாரம், சுற்றுப்புறம் ஆகிய வாழ்வின் எல்லா நிலைகளிலும் பரிவிரக்கத்தை அறிமுகம் செய்ய தீவிரமாக செயல்பட வேண்டியதை செயல்நோக்கு வலியுறுத்துகிறது. பரிவிரக்கம் நமது வாழ்க்கை முறையாக மாறி, நமது ஆன்மீகத்தை வெளிப்படுத்தும். சமத்துவத்தையும் நியாயத்தையும் காட்டிலும் பரிவிரக்கம் பெரியது. குறிப்பிட்ட தரப்புக்கு அல்லது வசதிக்கேற்ப பரிவிரக்கத்தை நாம் காட்டக்கூடாது. சவால், ஆபத்து, போராட்டம், தடைகள் முதலியவற்​றை எதிர்நோக்கியப் போதிலும் பரிவிரக்கம் நமது கிறிஸ்துவ வாழ்விலும் விசுவாசத்திலும் ஒன்றர கலந்தது.

இறையரசைக் கட்டியெழுப்பதில் பரிவிரக்கத்தை ( நமது உறவில் – நிரந்தரமோ தற்காலிமோ – ச​மூகத்தில்) கடைப்பிடித்து ஒழுக, இந்த கருப்பொருளும் நோக்கும் நமக்கு ஊக்கமும் ஆக்கமும் தருகின்றன.

திருச்சபையிலும் சரி ச​மூகத்திலும் சரி, பரிவிரக்கத்தைக் காட்டத் தொடங்குவதற்கும், தொடருவதற்கும் தவக்காலம் மிகப் பொருத்தமான காலம். ஆகவே, நமது உறவுமுறையின் ஆறு முக்கியப் பகுதிகளில் ( தனிநபர், குடும்பம், அதிச, வேலையிடம் அல்லது பள்ளிக்கூடம், ச​மூகம், நாடு) பரிவிரக்கத்தைக் காட்டுவதில் நாம் மறுஉறுதி கொள்வோம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s